என் மலர்
உலகம்
X
ஹைதி நாட்டில் கிறிஸ்தவ பேரணி மீது துப்பாக்கி சூடு- 7 பேர் பலி
ByMaalaimalar27 Aug 2023 10:49 AM IST
- கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர்.
- தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
போர்ட்-ஓ-பிரின்ஸ்:
ஹைதி நாட்டு தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர் பகுதியில் பாதிரியார் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிறிஸ்தவ பேரணி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு அணிவகுத்து சென்றனர்.
அப்போது கூட்டத்துக்குள் கிளர்ச்சியாளர்கள் குழுவினர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
Next Story
×
X