என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
மழை காலங்களில் கார் மைலேஜ்-ஐ அதிகப்படுத்த சூப்பர் டிப்ஸ்..!
- மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.
- கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும்.
மழை காலத்தில் கார் ஓட்டுவது சற்றே சவாலான காரியம் ஆகும். பொதுவாக மழை காலங்களில் கார் ஓட்டும் போது, மைலேஜ் சற்று குறைவதை பலரும் அனுபவித்து இருப்பர். அந்த வகையில், மழை காலங்களிலும் காரின் மைலேஜ் குறையாமல் இருக்க என்னென்ன செய்யலாம் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
திட்டமிடல்:
சமயங்களில் குறுக்கு வழியை தேர்வு செய்வது ஆபத்தில் முடியலாம். அதுவும் மழை காலங்களில் எந்த பகுதியில் தண்ணீர் தேங்கி இருக்கும் என்பது தெரியாது. இதனால் மழை காலங்களில் குறுக்கு வழிகளை தவிர்த்து, முன்கூட்டியே பயணத்தை திட்மிடுவது நல்லது.
திராட்டில்:
கார் பயன்பாட்டில் திராட்டில் செய்வதில் மென்மையாக செயல்பட்டால் காரின் மைலேஜ் சீராக அதிகப்படுத்த முடியும். காரை அக்செல்லரேட் செய்யும் போது தான் அதிக எரிபொருள் தேவைப்படும். இதனால் மென்மையாக திராட்டில் செய்தால், காரின் எரிபொருள் தேவையை பெருமளவுக்கு குறைக்க முடியும்.
டயர் அழுத்தம்:
டயரின் அழுத்தத்தை அதிகப்படுத்தினால், காரின் மைலேஜ் அதிகரிக்கும். ஆனால் இவ்வாறு செய்யும் போது க்ரிப் இழக்க நேரிடலாம். இது மிகவும் ஆபத்தான காரியம் ஆகும். இதன் காரணமாக மழை காலங்களில் கார் டயர் அழுத்தத்தை உற்பத்தியாளர் பரிந்துரைக்கும் படி வைத்துக் கொள்வது நல்லது.
ஏசி:
மழை காலங்களில் கார்களை ஏசி இல்லாமல் பயன்படுத்தும் போது வின்ட்ஷீல்டு முழுக்க புகை மூட்டம் ஏற்பட்டு சாலை சரியாக தெரியாமல் போகும் வாய்ப்புகள் உண்டு. அந்த வகையில், மழை காலங்களில் ஏசி-யை அதிக குளிர்ச்சியை ஏற்படுத்தும் அளவுக்கு வைக்காமல், குறைந்த குளிர்ச்சி ஏற்படும் வகையில் வைத்துக் கொள்ளலாம்.
கியர்:
கார்களில் கியர் மாற்றும் முறை அதன் மைலேஜிலும் பிரதிபலிக்கும். அந்த வகையில், கார் ஓட்டும் போது முடிந்தவரை அதிகபட்ச கியருக்கு விரைந்து மாறிக் கொள்வது நல்லது. குறைந்த கியரில் வாகனம் ஓட்டும் போது அதிக எரிபொருள் செலவாகிவிடும்.
Photo Courtesy: Freepik