என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
புதுப்பிக்கப்பட்ட அம்சங்களுடன் 'கிளாசிக் 350 பைக்'- ராயல் என்பீல்ட் அறிமுகம் செய்தது
- பல புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் வசீகரமான புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
- புதிய 'கிளாசிக் 350 பைக்' ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 500 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும்.
ராயல் என்பீல்ட் கிளாசிக் 350 பைக் கடந்த 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இருந்து அதன் பாரம்பரியமான வாகன வடிவமைப்பு, ரசனைமிகு அம்சங்கள் மற்றும் தனித்துவமான பொறியியல் பாரம்பரியம், ராயல் என்பீல்டின் மரபணுவின் சாராம்சத்தையும் தக்கவைத்து வருகிறது. அந்தவகையில், புதிய '2024 கிளாசிக் 350' பைக் கண்கவர் புதிய தோற்றத்துடன் பெருமையுடன் அறிமுகமாகியுள்ளது. அதுமட்டுமின்றி அதன் பாரம்பரிய புகழையும் அப்படியே கொண்டுள்ளது.
மிடுக்கான வாகனம் என்ற நற்பெயரை பாதுகாக்கும் அதே நேரத்தில் அனைவரும் அணுகக்கூடியதாகவும் தொடர்ந்து நீடிக்கிறது. பல புதுப்பிக்கப்பட்ட அம்சங்கள் மற்றும் வசீகரமான புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த புதிய 'கிளாசிக் 350 பைக்' ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்து 500 என்ற ஆரம்ப விலையில் கிடைக்கும். இதற்கான முன்பதிவு மற்றும் சோதனை ஓட்ட சேவைகள் இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் முதல் தொடங்கியுள்ளது.
ஹெரிடேஜ் (மெட்ராஸ் ரெட், ஜோத்பூர் புளூ), ஹெரிடேஜ் பிரீமியம் (மெடாலியன் புளூ), சிக்னல்ஸ் (கமாண்டோ சாண்ட்), டார்க் (கன் கிரே மற்றும் ஸ்டீல்த் பிளாக்) மற்றும் குரோம் (எமரால்டு) ஆகிய 5 புதிய ரகங்களில் 7 பளபளக்கும் வண்ணங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த பைக்கில் எல்.இ.டி. முகப்பு விளக்கு, 'பைலட் லேம்ப்', 'கிளஸ்டரில் கியர் பொசிஷன்' இன்டிகேட்டர் மற்றும் 'டைப் சி' சார்ஜிங்க் பாயிண்ட் போன்ற பல்வேறு பயனுள்ள புதிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பி.கோவிந்தராஜன் கூறுகையில், ''ராயல் என்பீல்டின் தூய்மையான மோட்டார் சைக்கிளிங் மரபணுவின் அசல் பிரதிபலிப்பாக 'கிளாசிக் 350' இருக்கும். அதன் மிடுக்கு, நுட்பமான வேலைப்பாடுகள் மற்றும் காலத்தால் அழியாத ஸ்டைலான அழகின் அப்பழுக்கற்ற அடையாளமாகவும் இருக்கும்'' என்றார்.
மேற்கண்ட தகவல் ராயல் என்பீல்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.