என் மலர்
கார்
முற்றிலும் புதிய நிசான் மேக்னைட் முன்பதிவு மற்றும் வினியோக விவரங்கள்
- முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது.
- புதிய மேக்னைட் மாடல் இருவித எஞ்சின் ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.
நிசான் இந்தியா நிறுவனம் இன்னும் ஒன்றிரண்டு நாட்களில் தனது அதிகம் விற்பனையாகும் மேக்னைட் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது. நாளை மறுநாள் (அக்டோபர் 4) புதிய மேக்னைட் மாடல் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், வினியோகம் அக்டோபர் 5 ஆம் தேதி துவங்க இருக்கிறது.
இந்த நிலையில், முற்றிலும் புதிய நிசான் மேக்னைட் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. இந்த காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இதோடு நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கான டீசர்களும் வெளியிடப்பட்டு உள்ளன.
டீசர்களின் படி மேக்னைட் மாடலின் பெரும்பாலான அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. ஃபேஸ்லிஃப்ட் மாடலில் வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, 360 டிகிரி சரவுண்ட் கேமரா, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகிறது.
இதுதவிர, புஷ் ஸ்டார்ட், ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங்கில் கார் அம்சங்களை இயக்கும் கண்ட்ரோல்கள், பின்புற ஏ.சி. வென்ட்கள், மத்தியில் கைவைத்துக் கொள்ளும் ஆர்ம்-ரெஸ்ட் போன்ற வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
பவர்டிரெயினை பொருத்தவரை புதிய மேக்னைட் மாடலிலும் 1.0 லிட்டர் NA பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்படுகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படும் என தெரிகிறது.