என் மலர்
கார்
நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம் - என்னென்ன ஸ்பெஷல்?
- புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது.
- இந்த கார் இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை காரை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும்.
புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்கள், இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. வெளிப்புறம் இந்த கார் புதிய தோற்றம் கொண்டுள்ளது. இதே போன்று புதிய அலாய் வீல் டிசைன் வழங்கப்படுகிறது. இதன் டெயில் லேம்ப் தோற்றம் மாற்றப்படவில்லை.
கேபின் பகுதியிலும் பெருமளவு மாற்றங்கள் இல்லை. புதிய ஸ்டீரிங் வீல், புதிய நிறங்கள் வழங்கப்படுகிறது. இந்த காரில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் போன் மிரரிங் வசதி, ஓட்டுநர் இருக்கை உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
இந்த கார் 1.0 லிட்டர் NA பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 71 ஹெச்பி பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
இதன் டர்போ பெட்ரோல் எஞ்சின் 99 ஹெச்பி பவர், 160 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன், 5 ஸ்பீடு AMT, 6 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT யூனிட் வழங்கப்படுகிறது.