என் மலர்
கார்
நிசான் காருக்கு எக்கச்சக்க சலுகைகள் அறிவிப்பு
- தள்ளுபடி மற்றும் சலுகைகள் ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
- சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுக விலைகள் ரூ.5.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன.
ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் நிறுவனம் இந்தியாவில் மேக்னைட் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடல்களுக்கு ரூ.60,000 வரை தள்ளுபடி வழங்குகிறது.
ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் காம்பாக்ட் எஸ்யூவி மாடலுக்கான சலுகைகள் தள்ளுபடி, எக்சேஞ்ச் சலுகை, கார்ப்பரேட் பலன்கள் மற்றும் லாயல்டி போனஸ் வடிவில் வழங்கப்படுகின்றன. தள்ளுபடி மற்றும் சலுகைகள் ஒவ்வொரு நகரத்திற்கு ஏற்ப மாறுபடும்.
நிசான் தற்போது ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மேக்னைட்டின் என்ட்ரி மற்றும் மிட் ரேஞ்ச் மாடல்களுக்கு ரூ.50,000 வரை மதிப்புள்ள பலன்களை வழங்குகிறது. டாப் எண்ட் மாடல்களுக்கு ரூ.60,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட்டின் அறிமுக விலைகள் ரூ.5.99 லட்சத்தில் இருந்து தொடங்குகின்றன, இது ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் மாடலைப் போலவே உள்ளது. இருப்பினும், டாப் எண்ட் மாடல்களின் விலை சற்று அதிகமாக உள்ளது. இதன் டாப் எண்ட் CVT வேரியன்ட் முன்பு ரூ. 11.11 லட்சமாக இருந்தது, இப்போது இதன் விலை ரூ.11.50 லட்சமாக மாறியுள்ளது.