என் மலர்
கார்
பயணிகள் வாகன விற்பனையில் கடும் சரிவு.. விற்பனையாளர்கள் வருத்தம்
- கார் விற்பனை சரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
- விற்பனை மையங்கள் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.
இந்திய ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு நாட்டில் அதிகரித்து வரும் விற்பனையாகாத பயணிகள் வாகன எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்ட தகவல்களின் படி இந்தியாவில் சுமார் 7.9 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் இருப்பது தெரியவந்துள்ளது.
தற்போது இந்தியாவில் உள்ள விற்பனையாகாத கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 79 ஆயிரம் கோடி ஆகும். நாட்டில் விற்பனையாகாத கார் யூனிட்களால் விற்பனை மையங்கள் நிதி சார்ந்த சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. கார் உற்பத்தியாளர்கள் அதிக யூனிட்களை உற்பத்தி செய்தது, நுகர்வோர் கார் வாங்க ஆர்வம் செலுத்தாதது மற்றும் கடுமையான கனமழை உள்ளிட்டவை கார் விற்பனை சரிய காரணங்களாக கூறப்படுகின்றன.
கார்கள் விற்பனையின்றி தேக்கம் அடைவதால், பல்வேறு விற்பனை மையங்களில் நிதி பற்றாக்குறை சூழல் உருவாகி இருப்பதாக ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ். விக்னேஷ்வர் தெரிவித்தார்.