என் மலர்
சினிமா செய்திகள்
ஆருயிர் நண்பர் நாளை வீடு திரும்புவதை அறிந்து மகிழ்கிறேன்- இளையராஜா
- மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர்.
- ரஜினிகாந்த் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனியார் மருத்துவமனையில் கடந்த 30-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இதயத்தில் இருந்து ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லும் மகா தமனியில் ('அயோர்டா') அவருக்கு வீக்கம் இருந்தது.
அதன்படி, முதுநிலை இதய இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர் சாய் சதீஷ் தலைமையிலான குழுவினர், மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி உள்ளனர்.
சிகிச்சையை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாளை டிஸ்சார்ஜ் என மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடுள்ளது.
இந்நிலையில், "ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நாளை வீடு திரும்ப இருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்" என இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், ஆருயிர் நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நாளை வீடு திரும்பவிருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
அவர் நல்ல உடல்நலம் பெற்று, ஆரோக்கியமாக வாழ, எல்லாம் வல்ல இறைவனின் அருள் எப்போதும் கிடைக்கட்டும்.
வருக, வருக...
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.