என் மலர்
ஆன்மிக களஞ்சியம்
திருமணத்தில் அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது ஏன்?
- திருமணம் செய்த தம்பதியர்கள் விருந்து ஒன்பால் செய்தால் தான் திருமணத்தின் சிறப்பு ஆகும்.
- விருந்து ஒன்பால் என்பது விருந்து உபசரித்தல் என்று பொருள்.
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் மரபு உண்டு.
ஏன் என்றால் அருந்ததி நட்சத்திரம் என்பது சாதாரண கண்களுக்கு ஒரு நட்சத்திரம் போல் காட்சியளிக்கிறது.
ஆனால் அதையே நுண்ணோக்கு கருவியால் கண்டால் இரு நட்சத்திரம் போல் காட்சி அளிக்கும்.
இதைத்தான் இரு உடல் ஒரு உயிர் என்பார்கள்.
அதாவது கணவன்+மனைவி இருவரும் இரு உடலாக இருந்தாலும் ஒரு உயிராக ஒற்றுமையுடனும் அன்யோன்யமாக 16 செல்வங்களையும் பெற்று பெறுவாழ்வு வாழ வேண்டும் என்பதே இந்த மரபில் மறைந்து இருக்கும் மறைபொருள் ஆகும்.
திருமணம் என்பது வெறும் இனபெருக்கம் செய்யும் செயல்தான் என்று எல்லோரும் நினைப்பது தவறான கருத்தேயாகும்.
திருமணம் செய்த தம்பதியர்கள் விருந்து ஒன்பால் செய்தால் தான் திருமணத்தின் சிறப்பு ஆகும்.
விருந்து ஒன்பால் என்பது விருந்து உபசரித்தல் என்று பொருள்.
ஆன்றோர்களும், சான்றோர்களும் விருந்து உபசரித்தல் செய்து அவர்களிடம் நல்லாசி பெற வேண்டும் என்பதுதான் திருமண தர்மம் கூறுகிறது.
அதற்கு பிறகு தன் வம்ச விருத்திக்காக பிள்ளை பெறுதல் வேண்டும் என்றும் கூறப்படுகிறது.