search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படாததால்  சாமி தரிசனம் செய்ய அனுமதி
    X

    சதுரகிரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படாததால் சாமி தரிசனம் செய்ய அனுமதி

    • காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது.
    • பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் அனுமதி.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.

    மலை மேல் உள்ள இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கார்த்திகை மாத பிரதோஷம், அமா வாசையை முன்னிட்டு இன்று (28-ந் தேதி) முதல் வருகிற 1-ந் தேதி வரை மலையேற வனத்துறை அனுமதி வழங்கி இருந்தது.

    தமிழகம் முழுவதும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சதுரகிரியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கான முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் பக்தர்களிடம் குழப்பம் நிலவியது.

    தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் சில இடங்களில் மழை பெய்து வந்தாலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழை இல்லை. மேலும் இந்த பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட வில்லை.

    இதை கருத்தில் கொண்டு பக்தர்கள் இன்று முதல் 4 நாட்கள் சதுரகிரி மலையேறி சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை இல்லை எனவும், மேற்கண்ட 4 நாட்களில் வானிலையை கருத்தில் கொண்டும் தினசரி மழைப்பொழிவை பொறுத்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து இன்று காலை பக்தர்கள் மலை யேறிச்சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டார் கள். காலை 7 மணிக்கு மலை அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயில் திறக்கப் பட்டு பக்தர்கள் அனு மதிக்கப்பட்டனர்.

    கனமழை எச்சரிக்கை மற்றும் அனுமதி வழங்கு வதில் ஏற்பட்ட கால தாமதம் போன்ற காரணங்களால் சதுரகிரிக்கு இன்று மிக மிக குறைந்த அளவிலேயே பக்தர்கள் வருகை தந்திருந்த னர்.

    பிரதோஷ தினமான இன்று மாலை சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பாக அபிஷேக, ஆரா தனைகள் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலு வலர் ராமகிருஷ்ணன் ஆகி யோர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×