என் மலர்
உள்ளூர் செய்திகள்
நரிக்குடி அருகே தனியார் வங்கி ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
- விரக்தியில் முத்திருளன் ஏற்கனவே ஒருமுறை தனது ஊரான வேம்பங்குடி பகுதியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வேம்பங்குடி காலனி பகுதியை சேர்ந்தவர் முத்திருளன் (வயது30), தனியார் வங்கி ஊழியர். இவருக்கு திருமணமாகி விஜயலட்சுமி (29) என்கிற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
தற்போது மனைவி-குழந்தைகளுடன் மறையூர் காலனி பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி விஜயலட்சுமி சிலைமான் பகுதியிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் முத்திருளன் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில் தனியார் வங்கி வேலையையும் விட்டார். இதனால் கடந்த 2 வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வேலைக்கு செல்லாமல் மேலும் குடிக்கு அடிமையான நிலையில் எந்நேரமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு சண்டை, சச்சரவுகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதில் ஏற்பட்ட விரக்தியில் முத்திருளன் ஏற்கனவே ஒருமுறை தனது ஊரான வேம்பங்குடி பகுதியில் தற்கொலைக்கு முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முத்திருளன் மறையூர் காலனி வீட்டில் இருந்த வந்த நிலையில் அக்கம் பக்கம் யாருமில்லாத நேரம் பார்த்து திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நரிக்குடி போலீசார் முத்திருளனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து அவரது மனைவியான விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.