என் மலர்
உள்ளூர் செய்திகள்
அம்மாப்பேட்டையில் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
- பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி கெஜலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஹரிகரசுதன் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ஹரிகரசுதன் அயோத்தி யாப்பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே ஹரிகரசுதனுக்கு பள்ளிக்கு போக விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் ஹரிகரசுதன் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு போகமாட்டேன் என கூறி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி காலையில் பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் மனமுடைந்த ஹரிகரசுதன் மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் அவரது சகோதரி மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனே தனது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.