search icon
என் மலர்tooltip icon

    சேலம்

    • இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது.
    • அணைக்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2938 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.

    சேலம்:

    மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வந்ததால் அங்கு தண்ணீர் தேவையும் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2938 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்க ப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 92.07 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.
    • அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    சேலம்:

    தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் தீவிரத்தை பொறுத்து மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து கணிசமாக அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 124 அடியாகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 120 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு ஏற்கனவே அணை 2 முறை நிரம்பியது. இந்த நிலையில் நீர்வரத்து தொடர்ந்து கணிசமாக வந்து கொண்டு இருப்பதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119 அடியை எட்டியது. எனவே இந்த ஆண்டில் 3-வது முறையாக அணை நிரம்புமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    அணைக்கு நேற்று வினாடிக்கு 4266 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 3 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

    மேலும் டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்.
    • மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சிலர் மாயமடைந்துள்ளதாக தெரிகிறது. மாயமான தொழிலாளர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தில் காயமுற்ற ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாயமான தொழிலாளர்களை நிலக்கரிகளை அப்புறப்படுத்தி தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

    • ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    • ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    சேலம்:

    மத்திய மந்திரி அமித் ஷா அம்பேத்கரை அவமதித்ததாக கூறி சேலம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தபோவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருந்தனர். இது பற்றி தெரியவந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில் நிலையம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் காஜா மைதீன் தலைமையில் ரெயில் மறியல் செய்ய ஊர்வலமாக வந்தனர்.

    அப்போது அவர்கள் அமித் ஷாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் ரெயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. பின்னர் ரெயில் மறியலுக்கு முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் நிலையத்திற்கு முன்பு போராட்டம் நடத்தினர். இதனால் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு நிலவியது.

    • பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.
    • 2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை.

    சேலம்:

    சேலம் அரசு தலைமை ஆஸ்பத்திரி மல்டி ஸ்பெசா லிட்டி ஆஸ்பத்திரியாக செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

    இதனால் 1000-த்திற்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக தினமும் சிகிச்சை பெற்று செல்லும் நிலையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உள் நோயாளிகளாகவும் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரி எப்போதும் நோயாளிகள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்கள் என மக்கள் கூட்டத்தால் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

    இந்த நிலையில் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் முதல் கழிவறைகள் மற்றும் கை, பாத்திரங்கள் கழுவும் இடங்களிலும் தண்ணீர் வரவில்லை. இதனால் நோயாளிகள் ஒவ்வொரு அறையாக தண்ணீருக்கு அலைந்தும் அங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நேற்றிரவு முதல் கழிவறை செல்பவர்கள் கூட தண்ணீர் இல்லாமல் கடும் அவதிப்பட்டனர். இதனால் கழிவறை அருகில் செல்ல முடியாமல் துர் நாற்றம் வீசுகிறது.

    2-வது நாளாக இன்றும் ஆஸ்பத்திரி கழிவறைகளில் தண்ணீர் வரவில்லை. இதனால் அங்கு தங்கியிரு க்கும் நோயாளிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் கடும் அவதிப்பட்டனர். மேலும் நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் சென்று இயற்கை உபாதைகளை கழித்து வருகிறார்கள்

    உள் நேயாளிகள் வெளியிலும் செல்ல முடியாமல், இயற்கை உபாதையும் கழிக்க முடியாமலும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சிலரது உறவினர்கள் வெளியில் சென்று பாத்திரங்களில் தண்ணீர் வாங்கி பயன்படுத்தினர். இதே போல சேலம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கழிவறையிலும் 2-வது நாளாக இன்றும் தண்ணீர் வராததால் போலீசாரும் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் சீரான தண்ணீர் வழங்கி நோயாளிகளின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பதுடன், தடையற்ற மின்சாரமும் வழங்க வேண்டும் என்பது அங்கு சிகிச்சை பெறுபவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 91.78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.94 அடியாக உயர்ந்து காணப்பட்டது. அணைக்கு நேற்று 6268 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 4266 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 91.78 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
    • வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் பூட்டப்பட்ட கோவில் ஒன்றை திறப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பெண்கள் அதிகமானோர் கூடியிருந்தனர். அவர்களைப் பார்த்து, சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி பாமக எம்.எல்.ஏ அருள், "ஆம்பள எவனுமே இல்லையா?" என அநாகரிகமாகப் பேசி இருக்கிறார்.

    அவர் தொடர்ந்து அநாகரிகமாக பேசுவதை கேட்டு பெண்கள் கையெடுத்து கும்பிடுகின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பார்த்த பலரும் எம்.எல்.ஏ. அருளுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

    • கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 91.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 118.53 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 7148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 7368 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.

    அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 91.14 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    • அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் மழையின் தீவிரத்தை பொறுத்து அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் கடந்த சில நாட்களாக உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 148 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 118.21 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 90.64 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இதே அளவில் இருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
    • அணையில் தற்போது 89.24 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 4727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 6384 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.

    இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 117.31 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 89.24 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது.
    • வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

    சேலம்:

    வங்கக்கடலில் மீண்டும் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவில் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏற்காட்டில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் பெய்யும் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் மீண்டும் மண் சரிவு ஏற்படுமோ? என்ற அச்சம் அங்கு வசிக்கும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்காட்டில் நேற்றிரவு முதல் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் அந்த கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர். ஏற்காடு செங்காடு கிராமத்தில் மின்கம்பத்தில் செல்லும் மின் கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு சீரமைக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    ஆத்தூர் அருகே உள்ள கரியகோவில், கருமந்துறை உள்பட பல பகுதிகளில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே கரியகோவில் அணை நிரம்பிய நிலையில் தற்போது இந்த மழையால் 2-வது முறையாக அணை நிரம்பி உள்ளது. இதனால் அணையில் இருந்து 190 கன அடி உபரி நீர் வசிஷ்ட நதியில் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் மழை அதிகரிக்கும் பட்சத்தில் கூடுதல் தண்ணீர் திறந்து விட வாய்ப்புள்ளதால் வசிஷ்ட நதியின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாநகரில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கிய மழை தொடர்ந்து சாரல் மழையாக நீடிக்கிறது . இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதே போல வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, வீரபாண்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மழையால் கல்லூரிகள் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். வழக்கமாக சில தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் காலை 6.30 மணி முதல் வீட்டில் இருந்து புறப்பட்டு செல்வார்கள். தாமதமாக விடுமுறை அறிவித்ததால் இதுபற்றி தெரியாமல் பள்ளிக்கு சென்ற பெரும்பாலான மாணவ-மாணவிகள் மீண்டும் மழையில் நனைந்தபடியே வீடுகளுக்கு திரும்பினர். சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலும் இதே நிலை காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் இதே போல கல்லூரிகள் மற்றும் அலுவலக வேலைகளுக்கு சென்றவர்கள் குடை பிடித்த பிடியும், ஸ்வெட்டர்கள் அணிந்த படியும் சென்றதை காண முடிந்தது.

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. திருச்செங்கோடு, பள்ளிப்பாளையம், குமாரபாளையம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்தனர்.

    • தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
    • அணையில் தற்போது 88.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    தமிழக, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது.

    இந்த நிலையில் அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 727 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 1000 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 88.82 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    ×