என் மலர்
உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகைகள், ரூ.25 லட்சம் கொள்ளை
- ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூர்:
கரூர் மாவட்டம் வாங்கல் காவல் நிலைய சரகம் எல்லை மேடு அருகே உள்ள காவிரிநகரை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது31).
இவர் கரூரில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வீட்டை பூட்டிவிட்டு கரூருக்கு சென்றிருந்தார்.
நேற்று இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் வலது பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.25 லட்சம் ரொக்க பணம் மற்றும் 16 பவுன் தங்க நகைகள் கொள்ளை போயின.
இதுபற்றி பவுன்ராஜ் வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தார்கள்.
அப்பகுதியில் கண்காணிப்பு கேமரக்களில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் ஆய்வு செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.