என் மலர்
இந்தியா
X
தெலுங்கானா துணை முதல் மந்திரி வீட்டில் திருடிய 2 பேர் கைது
ByMaalaimalar28 Sept 2024 10:41 AM IST
- பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
திருப்பதி:
தெலுங்கானா துணை முதல் மந்திரி மல்லு பாட்டி விக்கிரமார்கா. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடு சென்றார்.
அப்போது பஞ்சாரா ஹில்ஸ்சில் உள்ள அவரது வீட்டில் ரூ.22 லட்சம் ரொக்கம், 100 கிராம் தங்க நகைகள், வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் இதர பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இது சம்பந்தமாக பஞ்சாரா ஹில்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மேற்கு வங்க போலீசார் அங்குள்ள ரெயில் நிலையத்தில் கட்டு கட்டாக பணத்துடன் 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பீகாரை சேர்ந்த ரோஷன் குமார் மற்றும் உதயகுமார் என தெரியவந்தது.
அவர்கள் சில நாட்களுக்கு முன்பு தெலுங்கானா துணை முதல் மந்திரி விக்கிரமார்கா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனர். 2 பேரையும் மேற்குவங்க போலீசார், ஆந்திரா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
Next Story
×
X