என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தெலுங்கானா
- இரவில் நீல நிற விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- பெரிய ராட்சத மீன் நீந்தி செல்வதை போல காட்சியளிக்கும்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய கட்டிடம் ராட்சத மீன் வடிவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் இரவில் நீல நிற விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் மீன் கண் போன்ற ராட்சத விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தை பார்க்கும்போது நகரத்தின் நடுவில் பெரிய ராட்சத மீன் ஒன்று நீந்தி செல்வதை போல பிரமிப்பாக காட்சியளிக்கும்.
இதனை தி பிஷ் பில்டிங் என அழைத்து வருகின்றனர். தனித்துவமான கட்டிடக்கலைக்கு ஒரு அடையாளமாக இந்த ராட்சத மீன் கட்டிடம் மாறி உள்ளது.
மேலும் உலகம் முழுவதும் உள்ள வித்தியாசமான கட்டிடங்கள் பட்டியலில் இந்த ராட்சத மீன் கட்டிடம் தற்போது இடம்பெற்றுள்ளது.
- ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு சார்பில் பிரஜ்னா பிரவாக் என்ற பெயரில் 4 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.
- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐதராபாத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐதராபாத்துக்கு நாளை ஜனாதிபதி திஇந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை காலை டெல்லியில் இருந்து விமான மூலம் ஐதராபாத் வருகிறார். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கலாச்சார பிரிவு சார்பில் பிரஜ்னா பிரவாக் என்ற பெயரில் 4 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தலைமையில் நடைபெறும் மாநாட்டை திரவுபதி முர்மூ தொடங்கி வைத்து பேசுகிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐதராபாத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.ரவுபதி முர்மு வருகை
- ரேவந்த் ரெட்டிக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக போலீசார் கைது செய்தனர்.
- சிறையில் அடைக்கக்கோரி போலீசார் மனுதாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் நிராகரிப்பு.
தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ரேவந்த் ரெட்டி முதல்வராக இருந்து வருகிறார். சந்திரசேகர ராவின் பி.ஆர்.எஸ். கட்சியின் சமூக ஊடக செயற்பாட்டாளர் கோனதம் திலீப். சந்திரசேகர ராவ் ஆட்சிக்காலத்தில் இவர் தெலுங்கானா டிஜிட்டல் டைரக்டராக இருந்தவர்.
இவர் ரேவந்த் ரெட்டிக்கு எதிராகவும், அவரது ஆட்சிக்கும் எதிராகவும் சமூக வலைத்தளத்தில் தரக்குறைவாக கருத்து பதிவிட்டதாக போலீசார் கைது செய்தனர். கைது செய்த போலீசார் அவரை நீதித்துறை காவலில் (சிறையில் அடைக்க) உத்தரவிட வேண்டும் என மனுதாக்கல் செய்தனர்.
ஆனால் நீதிமன்றம் போலீசாரின் மனுவை நிராகரித்து, சிறையில் அடைக்க உத்தரவிட மறுத்துவிட்டது. இதனால் திலீப் விடுதலை செய்யப்பட்டார்.
திலீப் கைது செய்யப்பட்டதற்கான முழு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த வழக்கு ஏற்கனவே உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணைக்கு தடை விதித்துள்ளதாகவும் தெரிவித்த வழக்கறிஞர், கீழ் நீதிமன்றத்தில் சிறையில் அடைக்கும் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.
முன்னதாக போலீசார் காவிலில் எடுத்தபோது, நான் எந்தவிதமான குற்றமும் செய்யவில்லை என திலீப் கூறியிருந்தார். நான் அரசை எதிர்த்து கேள்வி கேட்டதால் என்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முதலும் கடைசியும் அல்ல. எனக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் தொடர்ந்து போராடுவேன் என திலீப் தெரிவித்துள்ளார்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பி.ஆர்.எஸ். கட்சி கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
- 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து
- டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
மின்சார வாகனங்கள் பயன்பாட்டை மக்களிடேயே ஊக்குவிக்கும் முயற்சியாக தெலங்கானா அரசின் புதிய அறிவிப்பு இன்று முதல் அம்மாநிலத்தில் அமலுக்கு வர உள்ளது. மின்சார வாகனங்களை நோக்கி மக்களை ஈர்க்கும் விதமாக 100 சதவீதம் சாலை வரி (Road Tax) மற்றும் பதிவு கட்டணம் (Registration Fee) ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின்சாரத்தில் இயங்கும் இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், வர்த்தக பயன்பாட்டு பயணிகள் வாகனங்கள், மின்சார ஆட்டோ ரிக்சா, மின்சாரத்தில் இயங்கும் இலக ரக சரக்கு வாகனங்கள், டிராக்டர் மற்றும் பேருந்துகளுக்கு இந்த திட்டம் பொருந்தும்.
2026-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை தெலங்கானாவில் வாங்கப்படும் மற்றும் பதிவு செய்யப்படும் அனைத்து வகையான மின்சார வாகனங்களுக்கும் சாலை வரி மற்றும் பதிவுக் கட்டணங்களில் இந்த 100 சதவீத விலக்கு பொருந்தும். தெலங்கானா அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்காக வாங்கப்படும் மின்சார பேருந்துகளுக்கு மட்டும் வாழ்நாள் வரி, கட்டண விலக்கு அமலில் இருக்கும்.
- தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு.
- சென்னை எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை கஸ்தூரி தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இது கடும் விமர்சனத்தை எழுப்பியது. அத்துடன் பல்வேறு காவல்நிலையங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
புகார் அடிப்படையில் சென்ன எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனைத்தொடர்ந்து கஸ்தூரி தலைமறைவானார். தவைமறைவான கஸ்தூரி முன்ஜாமின் கேட்டு விண்ணப்பித்திருந்தார். முன்ஜாமினை நீதிமன்றம் நிராகரித்தது.
இதற்கிடையே தலைமறைவானதால் தனிப்படை அமைக்கப்பட்டு, போலீசார் தேடிவந்தனர். தனிப்படை போலீசாருக்கு கஸ்தூரி ஐதராபாத்தில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஐதரபாத்திற்கு சென்று கஸ்தூரியை கைது செய்தனர்.
ஐதராபாத்தில் ககைது செய்யப்பட்ட கஸ்தூரி நாளை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சிறுமி பள்ளி செல்வதற்காக குளித்துவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தார்.
- 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், மஞ்சேரியல், சென்னூர், பத்மா நகரை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மகள் கஸ்தூரி நிவ்ருதி (வயது 12).
இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சிறுமி பள்ளி செல்வதற்காக குளித்துவிட்டு ஆடையை மாற்றிக் கொண்டு இருந்தார்.
அப்போது திடீரென சிறுமி மயங்கி கீழே விழுந்தார். இதனைக் கண்ட அவரது பெற்றோர் மகளை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆஸ்பத்திரியில் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- விமான ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது பயணி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார்.
- விமான சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் முகமது அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் டெல்லிக்கு இண்டிகோ விமானம் பயணிகளுடன் புறப்பட்டு சென்றது.
விமானம் புறப்படுவதற்கு முன்பாக விமானத்தில் பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டன.
விமானம் நடுவானில் பறந்து கொண்டு இருந்தது. அப்போது விமானத்தின் கழிவறையில் இருந்து புகை வந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விமான ஊழியர்கள் கழிவறையை திறந்து பார்த்தபோது பயணி ஒருவர் சிகரெட் பிடித்துக் கொண்டு இருந்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் முகமது அலி என தெரியவந்தது. இதுகுறித்து ஊழியர்கள் விமான கேப்டனுக்கு தகவல் தெரிவித்தனர்.
விமான சட்டத்தின் 125-வது பிரிவின் கீழ் முகமது அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒரே மாதத்தில் 2-வது வழக்கு என விமான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் மறு கரைக்குச் செல்ல முடியவில்லை
- இரு கரைகளையும் இணைக்கும் ஒரு இருப்பு பைப் அங்கு இருந்துள்ளது.
தெலங்கானாவில் நிர்மல் மாவட்டத்தில் உள்ள கல்லூரு கிராமத்தில் நீர்நிலையின் குறுக்கே இருந்த பாலம் இடிந்து விழுந்ததால் மக்கள் மறு கரைக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் பாலம் இல்லாமல் அக்கரைக்குச் செல்ல இளைஞர் ஒருவர் செய்த செயல் பலரை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பாலம் இல்லாத நிலையில் இரு கரைகளையும் இணைக்கும் ஒரு இருப்பு பைப் அங்கு இருந்துள்ளது.
எனவே அந்த இளைஞர் அந்த இருப்பு பைப் மீது தொத்தியபடி ஊர்ந்து ஊர்ந்து ஆபத்தான முறையில் மறு கரைக்கு சென்றுள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
#Telangana #निर्मल_जिला#कांग्रेस शासित तेलंगाना में,नदी पर बना एक पुल टूट गया।अब टूट गया तो टूट गया,कोई #सीएम को या खड़_ #gay या #पप्पू_पिंकी को तो इस पर जाना नहीं तो टूट गया तो टूट गया।अब बहुत मजबूर होकर वहां के अत्यंत प्रताड़ित लोग इस तरह से एक पाइप लगाकर अपनी जान खतरे… pic.twitter.com/3BLihvpKmG
— ??rajivchaudhary agrwl?? (@rclcpa4) November 13, 2024
- ஜவஹர்நகர் நகரில் நவம்பர் 12 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது.
- படுகாயமடைந்த நாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது.
தெலுங்கானாவில் 4 தெரு நாய்களை 3 பேர் சேர்ந்து கொடூரமாக அடித்து கொலை செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேட்சல்-மல்காஜ்கிரி மாவட்டத்தில் உள்ள ஜவஹர்நகர் நகரில் நவம்பர் 12 அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. 3 நாய்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த நாய் ஒன்று தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்லப்பட்ட 3 நாய்களில் ஒரு நாய் கர்ப்பமாக இருந்துள்ளது. இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்களிடையே கோவத்தை தூண்டியுள்ளது.
இதனையடுத்து ஜவஹர்நகர் போலீசார் நாய்களை அடித்துக் கொன்ற 4 பேரை கைது செய்தனர்.
- நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர்.
- கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம், துடியாலா அடுத்த லகசர்லா பகுதியில் 1,350 ஏக்கர் பரப்பளவில் அரசு சிப்காட், மருந்து நிறுவனம் அமைக்க முடிவு செய்தது. சிப்காட் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்காக நிலம் கையகப்படுத்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தினர். அப்போது கிராம மக்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை தாக்கி ஓட ஓட விரட்டினர். கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தாக்குதல் நடத்திய கிராம மக்கள் 16 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் விகாரபாத் கோடங்கல் பி.ஆர்.எஸ். முன்னாள் எம்.எல்.ஏ. நரேந்திர ரெட்டி இன்று காலை கே.பி. ஆர் பூங்காவில் நடைபயிற்சி சென்றார். அப்போது அங்கு வந்த போலீசார் கலெக்டர் மீது தாக்குதல் நடத்த தூண்டியதாக நரேந்திர ரெட்டியை கைது செய்தனர்.
- சரக்கு ரெயில் தடம் புரண்டதால் 20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
- மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ராகவா புரம் மற்றும் ராமகுண்டம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று இரவு இரும்பு தாது ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் சென்றது.
திடீரென சரக்கு ரெயிலில் 11 பெட்டிகள் தடம் புரண்டன. இதனால் தண்டவாளம் பெருமளவில் சேதம் அடைந்தது. என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தடம் புரண்ட ரெயில் பெட்டிகள் மற்றும் தண்டவாள சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதன் காரணமாக டெல்லியில் இருந்து தென் மாநிலங்களுக்கு செல்லும் ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
20 பயணிகள் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. 4 ரெயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்பட்டது. மேலும் 10 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தப்பள்ளி நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அவதியடைந்தனர்.
இதையடுத்து மதுரை - நிஜாமுதீன் ரெயில் பெத்தபள்ளி - நிஜாமாபாத்-முத்கேட்-பிம்பால்குரி வழியாக திருப்பி விடப்பட்டது.
சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் பெத்தபள்ளி-நிஜாமாபாத்-அகோலா வழியாக திருப்பி விடப்பட்டது.
பிலாஸ்பூர்-நெல்லை ரெயில் மச்சேரியல், பல்ஹர்ஷா, அகோலா, பூர்ணா, நிஜாமாபாத், பெத்தபள்ளி வழியாக திருப்பி விடப்பட்டது.
பயணிகளின் நலனுக்காக உதவி எண்கள் வழங்கப்பட்டு வருவதாக தெற்கு மத்திய ரெயில்வே தெரிவித்துள்ளது.
- குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது.
- குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.
தெலுங்கானா மாநிலம் மேட்சல் மல்காஜிகிரி மாவட்டம் கீசரகுட்டாவில் பிரசித்தி பெற்ற ராமலிங்கேஸ்வரசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு பக்தர்கள் பூ தூவி வழிபட்டு வருகின்றனர். நேற்று பக்தர்கள் அங்கு சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது குரங்கு ஒன்று துள்ளி குதித்து சிவலிங்கம் அருகே வந்து நின்றது. அருகில் இருந்த பூ ஒன்றை எடுத்து அடக்கத்துடன் சிவலிங்கத்தின் உச்சியில் வைத்தது. பின்னர் சிவலிங்கத்தின் மீது தலை சாய்த்து பவ்யமாக குரங்கு வழிபட்டது. இதனை கண்டதும் பக்தர்கள் பரவசம் அடைந்தனர். குரங்கு சிவலிங்கத்தை பக்தியுடன் வழிபட்டது பக்தர்களை கவர்ந்தது.
இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. குரங்கு தரிசனம் செய்த பின் பக்தர்கள் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்