என் மலர்
இந்தியா
X
மருத்துவ பரிசோதனைக்காக கவிதா ஆஸ்பத்திரியில் அனுமதி
ByMaalaimalar1 Oct 2024 12:29 PM IST
- கவிதா ஐதராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்பு.
ஐதராபாத்:
தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவருமான கவிதா டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையால் மார்ச் 15-ந் தேதி கைது செய்ய்பபட்டார்.
5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 27-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்கியது.
திகார் ஜெயிலில் இருந்த போது கவிதாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் மகப்பேறு பிரச்சனை ஏற்பட்டன. இதற்காக அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.
இந்த நிலையில் கவிதா ஐதராபாத்தில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் கவிதாவின் அலுவலகம் தெரிவித்து உள்ளது.
Next Story
×
X