என் மலர்
இந்தியா
தெலுங்கானா யூடியூபர் மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார்- பெண் பாடகி பரபரப்பு புகார்
- என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் புக்கிராம் மண்டலத்தில் உள்ள சின்னப்பூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.வி.மல்லிக் தேஜா என்கிற சிங்கார புமல்லேஷ். இவர் சோமன்பள்ளியை சேர்ந்த இளம்பெண்ணுடன் இணைந்து யூடியூப் சேனலைத் தொடங்கினார்.
இருவரும் 6 ஆண்டுகள் ஒன்றாக வேலை செய்தனர். அந்தப் பெண் சேனலுக்கு பாடல்கள் எழுதிப் பாடினார். இதனால் இருவரும் சமூகவலை தளத்தில் பிரபலமானார்கள். இந்த நிலையில் பெண் நாட்டுபுற பாடகி யூடியூப்பர் மல்லிகா தேஜா மீது போலீசில் புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் மல்லிகா தேஜா உடன் இணைந்து யூடியூப் சேனலில் பாடல்களை பாடி வந்தேன். அவர் எனக்கு ஒரு சிறிய தொகையை பங்காகக் கொடுத்து வந்தார். மல்லிக் தேஜா, என்னை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார்.
என்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தார். கடந்த 2 வருடங்களாக என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினேன்.
அவர் என்னை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த மாதம் மியூசிக் ஸ்டுடியோவில் வைத்து தனது ஆசையை நிறைவேற்றும்படி வற்புறுத்தினார். நான் அவரிடம் இருந்து தப்பி வந்தேன்.
அவர் சின்னப்பூரில் உள்ள எனது தாத்தா பாட்டி வீட்டிற்கு வந்து, என்னையும் பெற்றோரையும் அவதூறாக பேசி மிரட்டினார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.