என் மலர்
கிரிக்கெட் (Cricket)
X
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த தென் ஆப்பிரிக்கா
Byமாலை மலர்18 Oct 2024 2:29 AM IST
- மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 முறை ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.
- கடந்த ஆண்டு நடந்த இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு தென் ஆப்பிரிக்கா பழிதீர்த்துக் கொண்டது.
துபாய்:
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில், இந்த வெற்றியின் மூலம் மகளிர் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 15 வெற்றிகள் பெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு தென் ஆப்பிரிக்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்ததற்கு பழியும் தீர்த்துக் கொண்டது.
Next Story
×
X