என் மலர்
கிரிக்கெட் (Cricket)
2வது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது வங்கதேசம்
- டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 252 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 252 ரன்கள் எடுத்தது. கேப்டன் நஜ்மல் ஹொசைன் ஷாண்டோ 72 ரன்னும், ஜாகர் அலி 37 ரன்னும், சவும்யா சர்க்கா 35 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்கியது. ரஹமத் ஷா மட்டும் தாக்குப்பிடித்து 52 ரன்கள் எடுத்தார்.
வங்கதேச அணியினரின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இறுதியில் ஆப்கானிஸ்தான் 43.3 ஓவரில் 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 68 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-1 என இரு அணிகளும் சமனிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் 11-ம் தேதி நடைபெறுகிறது.