என் மலர்
கிரிக்கெட் (Cricket)
பாஸ்பால் காப்பியா... வாகனுக்கு பதில் கொடுத்த கிரிக்கெட் ரசிகர்
- இந்தியா இங்கிலாந்தை காப்பி அடித்துள்ளது.
- ஒருவேளை ரோகித் சர்மா, பென் ஸ்டோக்ஸ்க்கு போன் செய்து நான் உங்களை காப்பியடிக்க முடியுமா என்று கேட்டிருக்கலாம்.
இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நடைபெற்றது. இதில் 30 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முதல் நாள் ஆட்டம் மழையால் முடிவடைந்தது. 2-வது மற்றும் 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது.
அதன்பின் 4-வது ஆட்டத்தில் வங்கதேசம் 74.2 ஓவரில் 233 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்தியா அதிரடியாக விளையாடி 9 விக்கெட் இழப்பிற்கு 34.4 ஓவரில் 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. 2-வது இன்னிங்சில் வங்கதேசம் 146 ரன்னில் சுருண்டது. இந்தியா 95 இலக்கை எளிதாக எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு இந்தியாவின் அதிரடிதான் முக்கிய காரணம். டெஸ்ட் கிரிக்கெட்டில் பொதுவாக வீரர்கள் நிதானமாக விளையாடுவார்கள். தற்போது இந்தியா அதிரடியாக விளையாடியுள்ளது.
இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டதில் இருந்தே அந்த அணி பாஸ்பால் என்ற அதிரடி ஆட்டம் அணுகுமுறையை கடைபிடித்து வருகிறது. தற்போது இதை இந்தியா காப்பி அடித்துள்ளது என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குறிப்பிட்டார். இதற்கு ரசிகர் ஒருவர் சரியாக பதிலடி கொடுத்துள்ளார்.
கில்கிறிஸ் மற்றும் மைக்கேல் வாகன் ஆகியோர் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் அணுகுமுறை குறித்து பேசினர்.
அப்போது வங்கதேச அணிக்கெதிராக இந்தியா விளையாடியது குறித்து மைக்கேல் வான் கூறுகையில் "இந்தியா- வங்கதேசம் இடையிலான கான்பூர் டெஸ்ட் போட்டியை குறிப்பிடத்தக்க போட்டி என நான் சொல்வேன். வங்கதேசம் 74.2 ஓவரில் 233 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இந்தியா பின்னர் பேட்டிங் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது. இந்தியா தற்போது பாஸ்பாலர்களாகியதை பார்க்க சிறப்பானதாக இருக்கிறது.
அவர்கள் 34.4 ஓவரில் 285 ரன்கள் அடித்தனர். இந்தியா இங்கிலாந்தை காப்பி அடித்துள்ளது. இந்தியா தற்போது இங்கிலாந்தை காப்பி அடிக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது பயங்கரமானது. சட்ட விதிகள் பற்றி எனக்குத் தெரியாது, இதற்காக இங்கிலாந்து அவர்களிடம் கட்டணம் வசூலிக்குமா?.
காம்பால் (Gamball-காம்பீர் அணுகுமுறை) எனக்கு பாஸ்பால் போலவே தெரிகிறது. ஒருவேளை ரோகித் சர்மா, பென் ஸ்டோக்ஸ்க்கு போன் செய்து நான் உங்களை காப்பியடிக்க முடியுமா என்று கேட்டிருக்கலாம். இந்தியா பாஸ்பால் விளையாடுவதை நான் காண்கிறேன். இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. நல்ல வரவேற்பை பெற்றது. இது தொடர்பான எனக்கு பல்வேறு கருத்துகள் வந்தன" எனக் கூறியிருந்தார்.
அதில் ஒரு கருத்து "இந்தியா Ro-ball விளையாடிக் கொண்டிருக்கிறது. உங்கள் வாயை மூடிக்கொண்டிருங்கள் முட்டாள்" என குறிப்பிடப்பட்டிருந்தது.
இவ்வாறு மைக்கேல் வாகன் தெரிவித்தார்.