என் மலர்
கிரிக்கெட் (Cricket)
முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை சம்மன்
- முகமது அசாருதீன் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார்.
- அப்போது 20 கோடி ரூபாய் அளவில் நிதியை தவறாக பயன்படுத்தியமாக வழக்கு.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் கிரிக்கெட் வீரரும், அரசியல்வாதியுமான முகமது அசாருதீனுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரான முகமது அசாருதீன் மீது, அவரது காலத்தில் நிதியை தவறாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டது. முகமது அசாருதீனுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய முதல் சம்மன் இதுவாகும். இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும்படி அந்த சம்மனில் தெரிவித்துள்ளது.
ஐதாராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி கிரிக்கெட் மைதானத்திற்கு டீசல் ஜெனரேட்டர்கள், தீயணைப்பு சிஸ்டம்கள் உள்ளிட்டவைகள் வாங்கியதில் 20 கோடி ரூபாய் நிதியை தவறான முறையில் பயன்படுத்தியதாக வழகட்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் அணடு நவம்பர் மாதம் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தெலுங்கானாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 இடத்தில் சோதனை நடத்தினர். இதில் ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் பணியாற்றிய தலைவர், துணைத் தலைவர், செயலாளர் உள்ளிட்டோர் வீடுகள் அடங்கும்.
அப்போது கைப்பற்ற ஆவணங்கள் மூல் பண மோசடி நடைபெற்றது தெரியவந்தது. இவரது பதவிக்காலத்தில் நிதி பரிமாற்றம் தொடர்பாக தங்களுடைய பணி என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என அந்த சம்மனில் தெரிவித்துள்ளது.