என் மலர்
கிரிக்கெட் (Cricket)
இரானி கோப்பையில் அபிமன்யு ஈஸ்வரன் சதம்: 3ம் நாள் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 289/4
- முதலில் ஆடிய மும்பை அணி 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் அபிமன்யு சதமடித்தார்.
லக்னோ:
இரானி கோப்பை தொடருக்கான டெஸ்ட் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடிய சர்பராஸ் இரட்டை சதம் அடித்து 222 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ரகானே 97 ரன்னும், தனுஷ் கோட்யான் 64 ரன்னும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்னும் எடுத்து அவுட் ஆகினர்.
ரெஸ்ட் ஆப் இந்தியா தரப்பில் முகேஷ் குமார் 5 விக்கெட்டும், யாஷ் தயாள், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ரெஸ்ட் ஆப் இந்தியா அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ருத்ராஜ் கெயிக்வாட் 9 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
சாய் சுதர்சன் 32 ரன்னும், தேவ்தத் படிக்கல் 16 ரன்னும், இஷான் கிஷன் 32 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக ஆடி சதமடித்தார்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் ரெஸ்ட் ஆப் இந்தியா 4 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது. அபிமன்யு ஈஸ்வரன் 151 ரன்னும், துருவ் ஜுரல் 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.