என் மலர்
கிரிக்கெட் (Cricket)
மகளிர் டி20 உலகக் கோப்பை: ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி வங்கதேசம் வெற்றி
- டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
- முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது.
9-வது மகளிர் உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று தொடங்கியது.
வருகிற 20-ந்தேதி வரை நடக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிக்கப் படுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இன்று சார்ஜாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் வங்கதேசம்- ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சோபனா 36 ரன்கள் அடித்தார். ஸ்காட்லாந்து அணி சார்பில் சஸ்கியா மெக் ஹார்லி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 120 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி வங்காளதேச அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் மட்டுமே எடுத்து ௧௬ ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து தோல்வியடைந்தது. அதிகபட்சமாக ஸ்காட்லாந்து அணி சார்பில் சாரா ஜெனிபர் பிரைஸ் 49 ரன்கள் எடுத்தார்.