search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா
    X

    பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

    • இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது.
    • இதில் ஷூட் அவுட் சுற்றில் இந்தியா வென்று சாம்பியன் பட்டம் வென்றது.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது.

    லீக் சுற்று முடிவில் சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    நேற்று நடந்த முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, ஜப்பானை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் தென் கொரியாவை சீனா வீழ்த்தியது.

    இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, சீனா அணிகள் மோதின. முதல் பாதியில் சீனா 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் முடிவில் இரு அணிகளும் 1-1 என சமனிலை பெற்றது.

    இதையடுத்து, ஷூட் அவுட் முறை கொண்டு வரப்பட்டது. இதில் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் சீனாவை வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    Next Story
    ×