என் மலர்
தமிழ்நாடு
X
ஒரே பதிவு எண்ணில் 2 ஆவின் வாகனங்கள் இயங்கிய விவகாரம் - இருவர் மீது வழக்குப்பதிவு
Byமாலை மலர்7 Jun 2023 7:25 PM IST
- ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்தது.
- வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் ஆவினில் ஒரே பதிவெண்ணில் 2 வேன்களை இயக்கி, அதில் தினமும் சுமார் 2,500 லிட்டர் பால் நூதன முறையில் திருடியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த முறைகேட்டில் ஈடுபட்டிருப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வேலூர் ஆவினில் ஒரே பதிவு எண்ணில் இரண்டு வாகனங்கள் இயங்கிய விவகாரத்தில் இருவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
வாகன உரிமையாளர் சிவக்குமார், ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாகம் சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து சத்துவாச்சாரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருவர் மீதும் அவதூறாக பேசுதல் மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X