என் மலர்
தமிழ்நாடு
X
அமைச்சர் உதயநிதியை வரும் 19-க்கு பிறகு துணை முதல்வர் என அழைக்க வேண்டும்: அமைச்சர் ராஜகண்ணப்பன்
Byமாலை மலர்9 Aug 2024 2:44 PM IST
- தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
- சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்:
தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. கோவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என கூறினார். உடனே, இப்போது சொல்லக்கூடாது. ஆகஸ்ட் 19-ம் தேதிக்குப் பிறகு தான் அவர் துணை முதலமைச்சர் என விளக்கம் அளித்தார்.
இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story
×
X