என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்பு
- 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
சங்கரன்கோவில்:
தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்றது சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில்.
இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அப்போது நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் குடமுழுக்குத் திருவிழாவை யொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இதில் தினமும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
இதற்காக கோவில் உள் பிரகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. மேலும் ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகிய வற்றுடன் 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.
பின்னர் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஆச்சார்ய விஷேத சந்தி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் பூஜைகளுடன் 3-ம் மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணா குதி, தீபாராதனை முடிந்ததும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதான யாக சாலையில் மஹாபூர்ணாகுதி, உபச்சாரங்கள் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 5 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், 5.30 மணிக்கு வேத பாராயணம், காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 6:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.
காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.20 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.
விழாவில் அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அல்லி ராணி அய்யாத்துரை பாண்டியன், அறங்காவல குழு தலைவர் சண்முகையா அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்