என் மலர்
தமிழ்நாடு
குடியாத்தம் அருகே 2 சிறுவர்கள் கொலை- கட்டிட ஒப்பந்ததாரர் கைது
- வசந்தகுமார், சிறுவர்களை அழைத்து சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியுள்ளனர்.
- மனைவியை பிரிந்து சில மாதங்களாக வசந்தகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 2 சிறுவர்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
யோகராஜின் மகன்களான யோகித் (5), தர்ஷன் (4) ஆகிய சிறுவர்களை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி கட்டிட ஒப்பந்ததாரரான நண்பர் வசந்த குமார் அழைத்து சென்றுள்ளார்.
வசந்தகுமார், சிறுவர்களை அழைத்து சென்று வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தேடியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் அருகாமையில் இருந்து சிறுவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி வசந்த குமாரை கைது செய்தனர்.
மனைவியை பிரிந்து சில மாதங்களாக வசந்தகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே சிறுவர்களின் உடல்கள் கோவில் அருகாமையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதால் நரபலி முயற்சி நடந்திருக்கலாம் என உறவினர்கள், பொதுமக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.