என் மலர்
தமிழ்நாடு
X
ரெயில் தண்டவாளத்தில் உடைப்பு- தற்காலிகமாக சீர் செய்த ஊழியர்கள்
Byமாலை மலர்3 Oct 2024 10:38 AM IST
- தண்டவாளத்தில் திடீரென சத்தம் கேட்டதால் பணியில் இருந்த ஊழியர் ரெயிலை நிறுத்தியதாக தகவல் கூறப்படுகிறது.
- திருவனந்தபுரம்- சென்னை ரெயில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளதை உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
புளியமங்கலம் ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் திடீரென சத்தம் கேட்டதால் பணியில் இருந்த ஊழியர் ரெயிலை நிறுத்தியதாக தகவல் கூறப்படுகிறது.
ரெயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக திருவனந்தபுரம்- சென்னை ரெயில் 30 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன்பின் தண்டவாளத்தில் உடைப்பு தற்காலிகமாக சீர்செய்யப்பட்டு நிறுத்திவைத்திருந்த திருவனந்தபுரம் ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது.
Next Story
×
X