search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாம்சங் தொழிலாளர்கள் 19-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்
    X

    சாம்சங் தொழிலாளர்கள் 19-ந்தேதி உண்ணாவிரத போராட்டம்

    • ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் நிறுவன தொழிற்சாலை உள்ளது.
    • தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபடுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் சாம்சங் நிறுவன தொழிற்சாலை உள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் மாதம் தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.

    இந்த நிலையில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் நாளை மறுநாள்(19-ந்தேதி) ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்து உள்ளனர். தொழிலாளர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஆலை நிர்வாகம் ஈடுபடுவதாக ஊழியர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பிய பெரும்பாலான தொழிலாளர்களுக்கு முந்தைய பணி வழங்கப்படவில்லை என்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிர்வாகத்தின் அழுத்தம் தாங்காமல் ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதால் சி.ஐ.டி.யூ. போராட்டம் நடத்த முடிவு எடுத்து இருப்பதாக தெரிகிறது. தொழிற்சாலைக்கு உள்ளேயே அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×