என் மலர்
தமிழ்நாடு
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 21 ஆயிரம் கன அடியாக நீடிப்பு
- ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்:
தமிழக மற்றும் கர்நாடகா காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மாநில எல்லை பகுதியான பிலிக்குண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை அளவு குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 33 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து மாலை படிப்படியாக குறைந்து வினாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக சரிந்து வந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு அதே அளவான 21 ஆயிரம் கன அடி நீடித்து வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரித்து அதன் காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும் பரிசல் இயக்கமும் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 3-வது நாளாக நீடித்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். தொடர்ந்து பிலிக்குண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.