என் மலர்
தமிழ்நாடு
விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை வரவேற்று வாழ்த்துகிறேன்- எச்.ராஜா
- முதலில் அவர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்துவிட்டு அதற்கு அப்புறம் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பேசட்டும்.
- முதலில் அவர் தனது கொள்கையை சொல்லட்டும்.
காளையார்கோவில்:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் சுதந்திர போராட்டத்திற்காக முதன் முதலாக ஆங்கிலேயர்களை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் மருது பாண்டியர்கள். அவர்களது வீரம் போற்று தலுக்குரியது. ஆங்கிலேயர்களிடம் சரணடைந்து தூக்கிலிடப்பட்டார்கள். அவர்களது தியாகம் பாராட்டக் கூடியது. தேசியமும், தெய்வீகமும் நிறைந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றியவர்கள். அவர்களது தியாகத்திற்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இன்று இங்கு பா.ஜ.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தவறாக பாடியதாக கவர்னர் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆனால் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடியுள்ளார்கள். இதற்காக உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் டிஸ்மிஸ் செய்வாரா? முதலில் அவர் உதயநிதி ஸ்டாலினை டிஸ்மிஸ் செய்துவிட்டு அதற்கு அப்புறம் தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பேசட்டும்.
நடிகர் விஜய் இன்று அரசியல் இயக்கத்தை தொடங்குகிறார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன். யார் வேண்டுமானாலும் அரசியல் இயக்கம் தொடங்கலாம். முதலில் அவர் தனது கொள்கையை சொல்லட்டும். அவருக்கு மக்கள் ஆதரவு இருக்க வேண்டும். அவர் தேசிய அளவில் அரசியல் செய்யப்போகிறாரா, மாநில அரசியல் செய்யப்போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.