என் மலர்
தமிழ்நாடு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு
- இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது.
- அணைக்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2938 கனஅடியாக குறைந்து காணப்பட்டது.
சேலம்:
மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வந்ததால் அங்கு தண்ணீர் தேவையும் குறைந்து காணப்பட்டது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.12 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 2938 கனஅடியாக குறைந்து காணப்பட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்க ப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 92.07 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.