search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆற்றில் அடித்து செல்லப்பட்ட போலீஸ் சோதனை சாவடி
    X

    ஆற்றில் அடித்து செல்லப்பட்ட போலீஸ் சோதனை சாவடி

    • பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் சிதைந்து கடும் சேதமடைந்து உள்ளது.
    • தென்பெண்ணை ஆறு குறுக்கே சிறிய பாலம் உள்ளது.

    கடலூர்:

    தென்பெண்ணையாற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு. பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தென்பெண்ணையாறு கரையோரம் இருந்த ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் நிலங்கள் கடும் பாதிப்படைந்தது.

    கடலூர் அருகே அழகிய நத்தம் பகுதியில் தென்பெண்ணை ஆறு குறுக்கே சிறிய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் ரஜினி நடித்த ஜெய்லர் படக்காட்சிகள் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கரையோரத்தில் சிமெண்ட் மற்றும் இரும்பு கட்டிடத்தில் போலீஸ் சோதனை சாவடி இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது தண்ணீர் வடிந்துள்ள நிலையில் சோதனை சாவடி கட்டிடங்கள் இருந்த சுவடு இல்லாமல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது.

    ஆற்றின் அழகிய நத்தம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலைகள் முழுவதும் சிதைந்து கடும் சேதமடைந்து உள்ளது.

    பல்வேறு கிராமங்களுக்கு செல்லக்கூடிய சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதியடைந்து உள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×