என் மலர்
உலகம்
ஹோட்டல் அறைக்குள் ஏர் இந்தியா ஹோஸ்டஸ்க்கு பாலியல் தொல்லை.. தரதரவென இழுத்துச்சென்ற கொடூரம்
- அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
- அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஏர் இந்தியாவைச் சேர்ந்த ஹோஸ்டஸ் மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை லண்டனில் ஹீத்ரோவ் பகுதியில் உள்ள ரெடிஷன் ரெட் ஹோட்டலில் ஏர் இந்தியா விமான பணிக்குழுவினர் தங்கியுள்ளனர். அன்றைய இரவு சுமார் 1.30 மணியளவில் அந்த குழுவைச் சேர்ந்த விமானப் பணிப்பெண் ஒருவரின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார்.
தூக்கத்தில் இருந்த பெண் விழித்து அவரை பார்த்து அலறியுள்ளார். இதனால் பதற்றமான அந்த மர்ம நபர் பெண்ணை துணிகளை தொங்கவிடும் ஹேங்கர்களால் கடுமையாக தாக்கியுள்ளார். அறையை விட்டுத் தப்பித்துச் செல்ல அந்த பெண் கதவை நோக்கி முன்னேறிய நிலையில் அவரை தரையில் தள்ளி தரதரவென இழுத்துச் சென்றுள்ளார்.
அந்த நபரின் பிடியை விடுவிக்க பெண் கடுமையாகப் போராடியுள்ளார். இதனால் பெண்ணுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளது. பெண்ணின் அலறல் கேட்டு யாரும் வந்துவிடுவார்களோ என்று பயந்து அந்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதைத்தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நிர்வாகத்துக்கு ஏர் இந்தியா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SHOCKING!!Air India hostess attacked by Intruder in London!!Air india employees have been raising alarms about their accommodation in London lately. Management however was reluctant in changing their accommodation!!Says - Intruder followed till the room, knocked on pic.twitter.com/XSqN8lVtyP
— Hirav (@hiravaero) August 17, 2024