என் மலர்
உலகம்
கரன்சியில் இருந்து முஜிபுர் ரஹ்மான் படத்தை நீக்கும் வங்கதேசம்
- வங்கதேசத்தின் தேசத்தந்தை என ஷேக் ஹசீனாவின் தந்தை அழைக்கப்படுகிறார்.
- முஜிபுர் ரஹ்மான் படம் வங்கதேசம் கரன்சியில் இடம் பெற்றுள்ளது.
வங்கதேச நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் கேட்டு தங்கியுள்ளார்.
அவருக்கு எதிராக கொலை உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா தந்தை முஜிபுர் ரஹ்மான் வங்கதேச நாடு உருவாக முக்கிய காரணமாக இருந்தார். அவரை நாட்டின் தேசத்தந்தை என அழைப்பார்கள்.
வங்கதேச நாட்டின் கரன்சியில் முஜிபுர் ரஹ்மான் படம் இடம் பெற்றுள்ளது. தற்போது அவரது புகழை குறைக்கும் வகையில் கரன்சியில் இருந்து நீக்க முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளது.
டாக்கா 20, 100, 500 மற்றும் 1000 கரன்சிகளை பிரிண்ட் செய்ய மத்திய வங்கிக்கு இடைக்கால அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கரன்சிகளில் முஜிபுர் ரஹ்மான் பெயர் இடம் பெறக்கூடாது. அதற்குப் பதிலாக மதம் சார்பான கட்டமைப்புகள், பெங்காலி பாரம்பரியம் மற்றும் போராட்டத்தின்போது தீட்டப்பட்ட Graffiti ஆகியவை கரன்சியில் இடம் பெற வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்து வெளியாகியுள்ளது.
நான்கு வடிவிலான கரன்சியின் டிசைன் மாற்ற உத்தரவிட்டுள்ளதாகவும் மற்றவை படிப்படியாக மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தின்போது முஜிபுர் ரஹ்மான சிலை அவமதிப்புக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.