என் மலர்
உலகம்
நாட்டிற்கே முன்னுரிமை - பிரிட்டன் பிரதமர் ஆன கீர் ஸ்டாமர் உறுதி
- பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
- அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
பிரிட்டனில் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கன்சர்வேடிவ் கட்சியின் ரிஷி சுனக் பிரதமராக இருந்து வந்தார். பிரிட்டன் பாராளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொர்ந்து பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது.
650 உறுப்பினர்களை கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் களம் கண்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிவில் தொழிலாளர் கட்சி வெற்றிக்கு தேவையானதை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
தேர்தலில் போட்டியிட்ட பிரதமர் ரிஷி சுனக் வெற்றி பெற்ற போதிலும், அவரது கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளர்கள் பல இடங்களில் தோல்வியை தழுவினர். தேர்தலில் தோல்வியுற்ற நிலையில், ரிஷி சுனக் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சியை சேர்ந்த கீர் ஸ்டாமர் பிரிட்டனின் புதிய பிரதமர் ஆக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து பேசிய அவர், "மாற்றத்திற்கான பணிகள் துவங்குகின்றன. ஆனால் நாம் பிரிட்டனை மீண்டும் கட்டமைப்போம் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள வேண்டாம்," என்றார்.
"நம் நாட்டின் முதல் பிரிடிஷ்-ஆசிய பிரதமராக அவர் செய்த சாதனைகளுக்கு தேவையான கூடுதல் முயற்சியை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதற்கு இன்று அடையாளம் காண்கிறோம். மேலும் அவர் தனது தலைமையின் கீழ் கொண்டு வந்த அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கிறோம்."
"எனது அரசாங்கத்தில் நாட்டிற்கு முன்னுரிமை அளித்து, கட்சி மீது அதன்பிறகே கவனம் செலுத்தப்படும். இன்றைய உலகம் நிலையற்ற ஒன்றாக இருக்கிறது. இதற்கு சிறிது காலம் தேவைப்படும், ஆனால் மாற்றத்திற்கான பணிகள் உடனே துவங்கிவிடும் என்பதில் சந்தேகம் கொள்ளாதீர்கள்," என்று தெரிவித்தார்.