என் மலர்
உலகம்
அதிபர் புதின் அறிவிப்பு எதிரொலி: பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த உக்ரைன்
- ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களை கடந்து நீடித்து வருகிறது.
- இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன.
கீவ்:
ரஷியா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவி வருகிறது.
சமீபத்தில் முதல் முறையாக அமெரிக்க ஏவுகணையை பயன்படுத்தி ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரம் அடைந்து உள்ள ரஷியா, போரில் முதல்முறையாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது.
மேலும் உக்ரைனுக்கு உதவும் நாடுகளுக்கு ரஷிய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்காக ஹைப்பர்சோனிக் ஏவு கணைகளை அதிகளவில் தயாரிக்க புதின் உத்தரவிட்டுள்ளார்.
உக்ரைன் தாக்குதல்களுக்கு பழிவாங்குவதாக ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சபதம் செய்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் ராணுவம் நாடு முழுவதும் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக உக்ரைன் ராணுவம் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள செய்தியில், வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ரஷியாவின் தாக்குதலுக்கான சாத்தியக்கூறுகளைக் குறிக்கிறது. தங்குமிடங்களுக்கு விரைந்து செல்லும்படி பொதுமக்களை வலியுறுத்தி உள்ளது. இந்த ராணுவ எச்சரிக்கை உளவுத்துறை மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது என பதிவிட்டுள்ளது.
உக்ரைன் சக்திவாய்ந்த ஏவுகணைகளைப் பயன்படுத்திய பின், தகுதியான பதிலடி என்ற ரஷியாவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.