என் மலர்
உலகம்
டிரோன் ஜாமர்களுடன் பஸ்களை இயக்கும் ரஷியா
- ரஷியா-உக்ரைன் போரில் பல சம்பவங்களில் டிரோன்கள் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.
- டிரோன்கள் மற்றும் ஆபரேட்டருடனான தகவல்தொடர்பை துண்டிக்க ஜாமர்கள் உதவுகின்றன.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை. உக்ரைன்- ரஷியா போரில் டிரோன் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான ஹார்லிவ்காவில் உள்ள அதிகாரிகள் சில உள்ளூர் பஸ்களில் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஜாமர் கருவிகளை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகருக்கு அருகில் அமைந்துள்ள நகரத்தை சுற்றி செல்லும் ஒரு பஸ் கடந்த மாதம் உக்ரைனின் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். இதனால் ஜாமர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியா-உக்ரைன் போரில் பல சம்பவங்களில் டிரோன்கள் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. டிரோன்கள் மற்றும் ஆபரேட்டருடனான தகவல்தொடர்பை துண்டிக்க ஜாமர்கள் உதவுகின்றன. இது குறைவான ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக ஹார்லிவ்காவில் உள்ள பஸ் டிப்போவின் உரிமையாளரும் மேலாளருமான விளாடிமிர் மிரோனோவ் கூறுகையில், பஸ் ஓட்டுநர்களையும் பயணிகளையும் எங்களால் பாதுகாக்க முடியாது, எனவே நாங்கள் உதவி கோரினோம், அவர்கள் எங்களுக்கு நான்கு ஜாமர் சாதனங்களை வழங்கினர்.
அவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது, ஆனால் இந்த நேரத்தில் பாதுகாப்புக்காக நாங்கள் செய்யக்கூடிய அதிகபட்சம் இதுதான் என்று கூறினார்.