என் மலர்
உலகம்
அடைக்கலம் கேட்கும் ஷேக் ஹசீனா: இங்கிலாந்து சொல்வது என்ன?
- டாக்காவில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனா தற்போது இந்தியாவில் உள்ளார்.
- லண்டனில் தற்காலிகமாக குடியேற அடைக்கலம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.
ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது.
இங்கிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று கெய்ர் ஸ்டார்மெர் பிரதமராக உள்ளார். இவரது தலைமையிலான இங்கிலாந்து "அடைக்கலம் கேட்கும் தனிநபர்கள் அவர்கள் சென்றடையும் முதல் பாதுகாப்பான நாட்டில் அதை செய்ய வேண்டும். தேவைப்படும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி இங்கிலாந்து பெருமைக்குரிய சாதனைப் படைத்துள்ளது. எனினும் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் கேட்கும் அல்லது இடைக்கால தஞ்சம் அடைவதற்கான வசதி இல்லை" எனத் தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.