search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    16GB ரேம், 6000mAh பேட்டரி.. ஐகூ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை, அம்சங்கள் என்னென்ன?
    X

    16GB ரேம், 6000mAh பேட்டரி.. ஐகூ 13 ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை, அம்சங்கள் என்னென்ன?

    • இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன் டச் ஓஎஸ் 15 கொண்டுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    ஐகூ நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஐகூ 13 என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 எலைட் பிராசஸர் கொண்டிருக்கிறது. ஐகூ 12 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஐகூ 13 ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் 2K 1440x3168 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

    இத்துடன் 12 ஜிபி ரேம், 16 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், அதிகபட்சம் 512 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த ஃபன் டச் ஓஎஸ் 15 கொண்டுள்ளது.


    IP68 மற்றும் IP69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கும் ஐகூ 13 ஸ்மார்ட்போன் அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார், யுஎஸ்பி டைப் சி போர்ட், வைபை 7, என்எப்சி போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐகூ 13 ஸ்மார்ட்போன் லெஜன்ட் மற்றும் நார்டோ கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு நாளையும் (டிசம்பர் 5) விற்பனை டிசம்பர் 11 ஆம் தேதியும் துவங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்தவர்கள் மட்டும் டிசம்பர் 10 ஆம் தேதியே இதனை வாங்கிட முடியும்.

    ஐகூ 13 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 54 ஆயிரத்து 999 என்றும் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. விற்பனை அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்கள், விவோ ஸ்டோர்களில் நடைபெறும்.

    Next Story
    ×