search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    தேதி குறிச்சாச்சு.. தீபாவளிக்கு வெளியாகும் ஒன்பிளஸ் 13 சீரிஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
    X

    தேதி குறிச்சாச்சு.. தீபாவளிக்கு வெளியாகும் ஒன்பிளஸ் 13 சீரிஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

    • புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹேசில்பிலாடு பிரான்டு கேமராக்களே வழங்கப்படுகின்றன.
    • இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13 இன் வெளியீட்டு தேதி மற்றும் அதன் வடிவமைப்பு, வண்ணங்கள் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 13 வருகிற 31-ந்தேதி அன்று சீனாவில் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அதற்கு முந்தைய ஒன்பிளஸ் 12 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    ஒன்பிளஸ் 13: வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்கள்

    ஒன்பிளஸ் 13 மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளே, பின்புறம் வட்ட வடிவ கேமரா மாட்யுல் உடன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களைப் போல் இல்லாமல், புதிய ஸ்மார்ட்போனில் வட்ட வடிவம் கொண்ட கேமரா ஐலேண்ட் தனியாக இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று லென்ஸ்கள், சதுரங்க வடிவத்தால் ஆன எல்இடி ஃபிளாஷ் உள்ளது.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹேசில்பிலாடு பிரான்டு கேமராக்களே வழங்கப்படுகின்றன. இதை குறிக்கும் பிரான்டிங் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இடம்பெற்று இருக்கிறது.



    இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை டான், அப்சிடியன் பிளாக் மற்றும் ப்ளூ மொமென்ட் ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

    ஒன்பிளஸ் 13 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட முதல் சாதனங்களில் ஒன்றாக இருக்கும். இந்த புதிய சிப், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 100 வாட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 13 மாடலில் சோனியின் 50MP LYT-808 சென்சார், f/1.6 பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 3x ஆப்டிகல் ஜூம் வசதி, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.

    Next Story
    ×