என் மலர்
மொபைல்ஸ்
போக்கோ பிரான்டின் புது 4ஜி போன் அறிமுகம் - என்ன விலை, எந்த மாடல்?
- இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
போக்கோ நிறுவனம் சத்தமின்றி தனது C75 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. போக்கோ சர்வதேச வலைதளத்தில் போக்கோ C75 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. போக்கோ C75 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது சென்சார், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம் திறனை 16 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ளது.
புதிய போக்கோ C75 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 9 ஆயிரத்து 164 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 845 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.