search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரியல்மி P2 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
    X

    ரியல்மி P2 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்

    • ஸ்மார்ட்போன் 3 Ram மற்றும் சேமிப்பக உள்ளமைப்புகளை கொண்டுள்ளது.
    • ஸ்மார்ட்போனின் விலையை குறைக்கும் ரூ. 2000 கூப்பனையும் நிறுவனம் வழங்குகிறது.

    ரியல்மி P2 ப்ரோ 5G ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரியல்மி P2 ப்ரோ 5G அம்சங்கள்

    ஸ்மார்ட்போன் Snapdragon 7s Gen 2 SoC மற்றும் 80W வயர்டு SuperVOOC சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,200mAh பேட்டரியுடன் கிடைக்கிறது.

    இது 6.7 இன்ச் முழு-HD+ 3D வளைந்த AMOLED ஸ்கிரீன், 50-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 32 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் 3 Ram மற்றும் சேமிப்பக உள்ளமைப்புகளை கொண்டுள்ளது.

    இந்தியாவில் Realme P2 Pro 5G 8 GB + 128GB யின் விலை ரூ.21,999, 12 GB + 256 GB மற்றும் 12 GB + 512 GB விலை முறையே ரூ. 24,999 மற்றும் ரூ. 27,999.

    வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஸ்மார்ட்போனின் விலையை குறைக்கும் ரூ. 2000 கூப்பனையும் நிறுவனம் வழங்குகிறது. ரியல்மி P2 ப்ரோ 5G ஆரம்பகால விற்பனை செப்டம்பர் 17 ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடங்கிறது.

    இது ஈகிள் கிரே (Eagle Grey) மற்றும் கிளி பச்சை (Parrot Green) வண்ணங்களில் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×