என் மலர்
மொபைல்ஸ்
68W சார்ஜிங், ரக்கட் லுக்கில் புது தின்க்போன் மாடல் அறிமுகம்
- புதிய தின்க்போன் மாடல் மீடியாடெக் டிமென்சிட்டி பிராசஸர் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 4310 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய தின்க்போன் 25 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் 6.36 இன்ச் ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7300 பிராசஸர், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.
பிளாஸ்டிக் பில்டு கொண்டிருக்கும் புதிய தின்க்போன் மாடலில் 13MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 10MP டெலிபோட்டோ லென்ஸ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 4310 எம்ஏஹெச் பேட்டரி, 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் சப்போர்ட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்பன் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.