என் மலர்
புதிய கேஜெட்டுகள்
புது மாடல் OWS இயர்பட்ஸ் அறிமுகம் செய்த போட் - விலை எவ்வளவு தெரியுமா?
- புதிய ஓபன் வயர்லெஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
- அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
போட் நிறுவனம் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் லூப் ஓபன் வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் ஏர்டோப்ஸ் ப்ரோகியர் ஓபன் இயர் வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்த நிலையில், தற்போது புதிய ஓபன் வயர்லெஸ் மாடல் அறிமுகமாகி இருக்கிறது.
க்ளிப் ஆன் டிசைன் கொண்டிருக்கும் புதிய இயர்பட்ஸ் நீண்ட நேர பயன்பாடுகளின் போதும் அசௌகரியத்தை ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஏர் கன்டக்ஷன் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு காதுகளை முழுமையாக அடைத்துக் கொள்ளாமல் அதிக துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது.
இந்த இயர்பட்சில் 12mm டிரைவர்கள் உள்ளன. இத்துடன் போட் சிக்னேச்சர் சவுண்ட் மற்றும் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது. பயனர்கள் இதில் இரண்டு EQ மோட்களில் மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. கேமர்களுக்காக இந்த இயர்பட்சில் 40ms வரை லோ-லேடன்சி மோட் உள்ளது. இத்துடன் அழைப்புகளின் போது அதிக தரமுள்ள ஆடியோ கிடைப்பதை ENx உறுதிப்படுத்துகிறது.
புதிய ஏர்டோப்ஸ் லூப் மாடல் 50 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இதில் உள்ள ASAP சார்ஜ், இயர்பட்சை பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்து 200 நிமிடங்கள் வரை பயன்படுத்த வழி செய்கிறது. இத்துடன் IWP தொழில்நுட்பம், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, IPX4 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
போட் ஏர்டோப்ஸ் லூப் மாடல்: பியல் வைட், கூல் கிரே மற்றும் லாவெண்டர் மிஸ்ட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ் விற்பனை போட், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.