என் மலர்
புதிய கேஜெட்டுகள்
பேப்பர் போல் மடிக்கலாம்.. புது ஃபோல்டபில் போன் உருவாக்கும் ஹானர்..
- இருவித ஃபோல்டபில் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் கனெக்டிங் சேம்பர் வழங்கப்படுகிது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான சந்தை உலகளவில் வளர்ச்சி பெற்று வருகிறது. இதுதவிர ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இந்த பிரிவில் புதுவகை மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றன.
இதுவரை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாக மடித்துக் கொள்ளும் ஸ்மார்ட்போன், ப்ளிப் ரக ஸ்மார்ட்போன் என இருவித ஃபோல்டபில் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதுதவிர, சில நிறுவனங்கள் மூன்றாக மடிக்கும் வகையிலான ஸ்மார்ட்போன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வரிசையில், ஹானர் பிராண்டு உருவாக்கி வரும் புதிய வகை ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் மடித்துக் கொள்ளலாம் என்ற வகையில் உருவாக்கப்படுகிது. இந்த சாதனத்தில் சுழலும் ஷாஃப்ட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மத்தியில் கனெக்டிங் சேம்பர் வழங்கப்படுகிது.
இது குறித்து வெளியாகி இருக்கும் புகைப்படங்களின் படி புதுவித ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் மத்தியில் கனெக்டிங் சேம்பர் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சாதனத்தை எந்தப் பக்கம் வேண்டுமானாலும் மடித்துக் கொள்ளலாம்.
தற்போது இந்த ஸ்மார்ட்போனின் காப்புரிமை விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், இந்த சாதனம் சந்தையில் விற்பனைக்கு வருமா என்பதும், எப்போது விற்பனைக்கு கிடைக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.