என் மலர்
புதிய கேஜெட்டுகள்
ரூ. 1,899 விலையில் ஐகூ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- ஐகூ TWS 1e இயர்பட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
- ஐகூ TWS 1e மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஐகூ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய இயர்பட்ஸ் TWS 1e என அழைக்கப்படுகிறது. இந்த இயர்பட்ஸ் தீப்பொறியை பிரதிபலிக்கும் டிசைன் அம்சங்களை கொண்டிருக்கிறது.
இந்த இயர்பட்ஸ் 11 மில்லிமீட்டரில் அதிக ரெசல்யூஷன் கொண்ட ஸ்பீக்கர் டிரைவர் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஆடியோ கோல்டன் ஆடியோ இயர் அகௌஸ்டிக்ஸ் குழுவினர் டியூன் செய்துள்ளனர். இதோடு டீப் எக்ஸ் 3.0 ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்ட்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒட்டுமொத்த ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துகின்றன.
புதிய ஐகூ இயர்பட்ஸ் மாடலில் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மான்ஸ்டர் சவுண்ட் அம்சம் கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. இந்த இயர்பட்ஸ் லோ லேடன்சி மோட் வசதி கொண்டுள்ளது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 42 மணி நேரத்திற்கான பேட்டரி பேக்கப் வழங்குகிறது.
இத்துடன் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. இதை கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் மூன்று மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். மேலும் டூயல் டிவைஸ் கனெக்ஷன் வசதி உள்ளது. இதில் ப்ளூடூத் 5.3, கூகுள் பாஸ்ட் பேர், கூகுள் அசிஸ்டண்ட், வியரிங் டிடெக்ஷன், பைன்ட் மை இயர்போனஸ், டச் கண்ட்ரோல் வசதி உள்ளது.
ஐகூ TWS 1e மாடலின் விலை ரூ. 1,899 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த இயர்பட்ஸ் ஃபிளேம் எல்லோ நிறத்தில் கிடைக்கிறது. இதன் விற்பனை அமேசான் தளத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி துவங்குகிறது.