என் மலர்
புதிய கேஜெட்டுகள்
மிட் ரேஞ்ச் விலையில் புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் ரியல்மி
- ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும்.
- இந்த ஸ்மார்ட்போன் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல்.
ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய P1 ஸ்பீடு 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை ரியல்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. மேலும், புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி புதிய ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7300 எனர்ஜி 5ஜி பிராசஸர், ஹோல் பன்ச் டிஸ்ப்ளே, பின்புறம் வட்ட வடிவம் கொண்ட கேமரா கட் அவுட் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரியல்மி P சீரிஸ் மாடல்களில் புதுவரவாக இணைகிறது. முன்னதாக இதே சீரிசில் ரியல்மி P1, ரியல்மி P1 ப்ரோ மற்றும் ரியல்மி P2 ப்ரோ ஆகிய மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இவற்றைத் தொடர்ந்து புதிய ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் வருகிற 15 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது. புது ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி வலைதளங்களில் உள்ள பிரத்யேக மைக்ரோசைட்டில் இடம்பெற்றுள்ளன.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி P1 ஸ்பீடு ஸ்மார்ட்போன் கூலிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி, IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.